கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதனை தொடர்ந்து மு.க ஸ்டாலின் ஆட்சி அமைத்தவுடன் இதுகுறித்த நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வந்தன.அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் மாதக்கணக்கில் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார்.
இதனால் மு.க ஸ்டாலின் விரைவில் இந்த தீர்மானத்தின் மீதான பரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு அறிவுறுத்தி வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி இந்த தீர்மானம் தமிழக அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் தமிழக முதல்வர் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று காலை 11 மணி அளவில் கூட்டினார் . இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார். அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் 8 கோடி மக்களின் மன உணர்வை பிரதிபலிக்கிறது.
இதனை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க மறுத்து மீண்டும் தமிழக அரசுக்கு 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் ஆளுநர் தனது கடமையை செய்ய தவறி விட்டார். மேலும் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.