ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம் முடிவடைந்துவிட்டது என எலான் மஸ்க்கிற்கிடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .
ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம் முடிவடைந்தது என அந்நிறுவனம் எலான் மஸ்க்கிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 4,400 கோடி டாலர் விலைக்கு வாங்க டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதனையடுத்து போலி ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைப் பெறுவது தாமதமாவதாக எண்ணி தற்காலிகமாக ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காத்திருப்பு காலம் சட்டப்படி முடிந்துவிட்டது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தை முடிப்பது பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவது போன்ற நிபந்தனைகளுக்கு முற்பட்டது என்றும் ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.