வண்டலூர் – கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நான்கு இடங்களாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியூருக்கு பேருந்துகள் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அதேபோல நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது.
சென்னைக்கு வெளியூர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் அதிகரித்துக் வரக்கூடிய காரணத்தால் அவற்றை முழுமையாக கையாள கோயம்பேடு பேருந்து நிலையம் போதுமானதாக இல்லை.. வெவ்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு தாம்பரம் அடுத்துள்ள கூடுவாஞ்சேரி அடுத்து இருக்கும் கிளாம்பாக்கத்தில் பெரிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் நெரிசல் போக்குவரத்து அதிகரிப்பதால் கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையம் 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 2019ல் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி என்பது தற்போது முழுமை அடைந்துள்ளது. எனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இது திறக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து எளிதாக உள்ளே வந்து செல்வது போலவும், அதேபோல மக்களும் எளிதாக உள்ளே வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு இடங்களில் நவீன தொழில்நுட்பங்கள், கட்டட அமைப்புகள் பார்த்து, அந்த அடிப்படையில் எளிதாக வந்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..