Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“முடிவடைந்த மீன்பிடி தடை காலம்”…. ஈரோட்டில் குறையாத மீன்களின் விலை…!!!!

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த பிறகும் ஈரோட்டில் மீன்களின் விலை குறையாமல் இருக்கின்றது.

சென்ற இரண்டு மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்ததால் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை உயர்ந்து ஒரு கிலோவுக்கு 250 முதல் 300 வரை விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது மீன்பிடி தடை காலம் முடிவடைந்து இருக்கின்றது.

ஆனால் ஈரோட்டுக்கு குறைந்த அளவிலான மீன்களே வருவதால் மீன்களின் விலை குறையாமல் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூபாய் 1000-க்கும் வாவுல் மீன் ஒரு கிலோ 800 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோட்டில் நேற்று சங்கரா 300 ரூபாய்க்கும் அயிலை மீன் 250 ரூபாய்க்கும் கொடுவா மீன் 500 க்கும் கிளி மீன் 450க்கும் சீலா மீன் 500க்கும் நண்டு 400-க்கும் இறால் 600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Categories

Tech |