Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முடிவுக்கு வந்த சர்ச்சை… கொரோனா தடுப்பூசியால் விவேக் இறக்கவில்லை…. மத்திய ஆய்வுக்குழு தகவல்!!

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என மத்திய ஆய்வுக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்ட பிறகு இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகத்தை பொருத்தமட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவானது. நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி மட்டுமே காரணம் இல்லை என்று ஏற்கனவே தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை விளக்கமளித்த நிலையில், தற்போது மத்திய அரசின் மருத்துவ வல்லுநர் குழு அறிக்கையை தற்போது மத்திய சுகாதார துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு நேரடியாக அறிக்கையை சமர்ப்பணம் செய்திருக்கிறது..

அதாவது, விவேக்கின் மரணம் தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.. அதன்பிறகு பிறகு மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மருத்துவ வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது.. அந்தக் குழு  தான் ஒரு அறிக்கையை சமர்ப்பணம் செய்துள்ளது..

அந்த அறிக்கையை பொருத்தமட்டில், விவேக்கின் மரணம் என்பது இயற்கையான முறையில் மட்டுமே நடந்திருக்கிறது.. உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே தான் உயிரிழந்திருக்கிறார்.. அவருடைய மரணத்திற்கு ஒரு துளியும் கூட இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், இந்த கொரோனா மரணத்திற்கு தற்போது விளக்கம் என்பது கிடைத்திருக்கிறது.. அதேபோன்று இந்த சர்ச்சை விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது..

நடிகர் விவேக்கின் மரணம் தொடர்ச்சியாக பரபரப்பாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பேசப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய ஒரு சில நாட்களில் இவருடைய மரணம் என்பது ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி பாதுகாப்பில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

Categories

Tech |