Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா உக்ரைன் ரஷ்ய போர் …?? காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமரச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது.

ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடைபெற்ற சமரச சந்திப்பிற்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து தற்போது இந்த காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் கிரிமியா மற்றும் டான்பாஸ் குறித்த ரஷ்யாவின் நிலைபாடுகள் மாறாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |