Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முடிவுக்கு வருமா – ஒற்றை யானையின் அட்டகாசம்

வேலூர் பத்திரப்பள்ளியில் ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி வீடுகளை இடித்து துவசம் செய்யும் அட்டகாசம் செய்வதை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்திரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனக்கு சொந்தமான 3.27 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் மற்றும் வாழை பயிரிட்டுள்ளார். இதேபோன்று விவசாயி கர்ணனும் தனக்கு சொந்தமான 3.30 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிர் வைத்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவில் காட்டுயானை ஒன்று வந்து இரண்டு நிலகளிலும் உள்ள வாழை, நெல், பயிர்களை சேதப்படுத்தியதுடன் கோவிந்தனின் வீட்டை அடித்து துவசம் செய்துள்ளது. இதுகுறித்து வனத்துறை தகவல் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. உடனடியாக யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |