உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே போப் பிரான்சிஸ் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் போப் ஆண்டவர் ரஷ்யா-உக்ரைன் இடையே சமாதானம் நிலவுவதற்காக சிறப்பு பிரார்த்தனை ஒன்றையும் நடத்தினார். இந்த சிறப்பு பிரார்த்தனை வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் பாதிரியார்கள், பிஷப்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 3,500 பேர் பங்கேற்றனர்.
இந்த பிரார்த்தனையின் போது போப் பிரான்சிஸ், “2 உலகப் போர்கள் கடந்த நூற்றாண்டில் நடந்த போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனித குலம் மறந்துவிட்டது” என்று கூறியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த சிறப்பு பிரார்த்தனை மொழிபெயர்க்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் இந்த சிறப்பு பிரார்த்தனை உள்ளூர் மொழிகளில் நடந்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்கள் வாடிகனில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். இருப்பினும் அரங்கத்தில் அவர்கள் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.