பெண்கள் அனைவரும் தங்களின் முடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நாளுக்கு நாள் முடி உதிர்வது தான். அதனை தடுப்பது மிகவும் சுலபம். உங்கள் முடி உதிர்வதை தவிர்த்து நீளமாக வளர இதை மட்டும் செய்தால் போதும். விளக்கு எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறையும் கலந்து கொள்ள வேண்டும்.
முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் விட்டு விட வேண்டும். அதன் பிறகு தலை முடியை அலசுங்கள். இதனை வாரத்தில் ஒரு முறை செய்வதால் தலை முடி உதிர்தல் பிரச்சனையானது விட்டால் போதுமென்று ஓடி போய்விடும். எனவே உங்கள் கூந்தல் கருமையுடன் நீளமாக வளர வாரத்தில் ஒருமுறை இதை மட்டும் செய்தால் போதும்.