Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி… நன்றாக செழித்து வளர…. இந்த கொய்யா இலையை இப்படி யூஸ் பண்ணுங்க…!!

கொய்யா இலைகளை தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகுமாம். இதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

கொய்யா இலைகளை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது குறிப்பிட்ட பலன்களை பெறமுடியும். வைட்டமின் சி இந்த இலைகளில் நிறைந்துள்ளதால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு அளிக்கிறது.

இது வலி நிவாரணியாகவும் அலர்ஜி எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. இதிலுள்ள பண்புகள் தலை, முடி, வேர்களுக்கு அதிசய சக்தியை கொடுக்கின்றது. அதனால் முடி உதிர்வு குறைகின்றது. இந்த இலைகளின் சாறு நன்கு சருமத்தில் ஊடுருவி அரிப்பு, பொடுகு மற்றும் வறட்சி போன்ற பிரச்சினைகளில் இருந்து தலையை பாதுகாக்கின்றது.

இதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் தலைமுடியை ஆரோக்கியமாக்குகின்றது. தலைமுடி சேதம் அடைவதில் இருந்து பாதுகாத்து, ரத்த ஓட்டத்தை அதிகரித்து நன்மையை தருகிறது. சூரிய கதிர்களில் இருந்து பாதுகாப்பு போன்ற பலன்களை இந்த கொய்யா இலைகள் தருகின்றது.

Categories

Tech |