பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை என்பது இயல்பானஒன்று அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு சிடுசிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும் முடி கருமையாக அடர்த்தியாக வளரும்.
மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும் தீராத தலைவலி குணமாகும் முடியும் நன்றாக அடர்த்தியாக வேகமாக வளரும்.
நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலைக்கு தடவி வர அல்லது தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழிப்பாக வளரும் முடியும் உதிராது இளநரை சிறிது சிறிதாக மறையும்.