Categories
லைப் ஸ்டைல்

முடி தொடர்ந்து அதிகமாக கொட்டினால்…. இந்த 9 பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

தலை முடி உதிர்தல் என்பது இயற்கையானது தான். சரியாக பராமரிக்காமல் இருந்தால் முடி உதிரும். அதேவேளையில் தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டே இருந்தால் உடலில் ஆரோக்கிய குறைபாடுகளாலும் ஏற்படலாம். ஆண், பெண் இருவருமீ தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும். தலை முடி எப்போதும் வேரோடு வந்து கொண்டிருந்தால் அதற்கு கீழ்க்கண்ட குறைபாடுகள் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

பரம்பரையாக முடி உதிர்தல் பிரச்சினை இருந்தால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும்.

உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களால் மயிர்க்கால்களில் உணர்திறன் அதிகரித்து முடியின் வேர்கள் பலவீனமாக இருக்கிறது. இது முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.

கர்ப்பகாலத்தில் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். காரணம் உடலில் நீர்ச்சத்து இல்லாமை, சோர்வு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவை.

உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படலாம்.

தைராய்டு மருந்து எடுத்துக்கொள்ளும்போது முடி உதிர்வை உண்டாகும்.

உடலில் இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகை, ரத்த இழப்பு ஆகியவற்றினால் முடி உதிர்தல் ஏற்படும்.

உச்சந்தலையில் பாக்டீரியா, பூஞ்சை தொற்று இருந்தால் முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகி விடுகிறது.

நம்முடைய உடல் நல குறைபாட்டிற்காக மருந்து எடுத்துக்கொள்ளும்போது முடி உதிர்தல் ஏற்படுகிறது.

அதிக ஊட்டச் சத்துக்களான விட்டமின் ஏ, விட்டமின் டி மற்றும் செலினியம் போன்றவற்றை  எடுத்துக்கொள்ளும்போது முடி உதிர்தல் உண்டாகும்.

Categories

Tech |