விழுப்புரம் அருகே உள்ள முட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் மலையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருக்கும் முட்டத்தூர் கிராமத்தில் மலை இருக்கின்றது. இந்த மலையில் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டவன் தலைமையிலான இளைஞர்கள் கள ஆய்வு செய்த போது 2 ஆயிரம் அடி உயரத்தில் வழுவழுப்பான சமநிலை பாறை கிடைத்துள்ளது. அதனருகே சிவப்பு வண்ண ஓவியங்களும் இருந்தது.
இதுபற்றி கண்டறிந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளதாவது, மனிதர்கள் வேட்டை சமூகமாக இருந்து விலங்குகளை எதிர்த்து போராடுவதற்கான பயிற்சியை மேற்கொண்டதற்கான அடையாளமும் விலங்கின் உருவமும் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஓவியங்களானது 5000 வருடங்களுக்கு முன்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த பாறை ஓவியங்களை பாதுகாக்க தமிழக அரசும் விழுப்புரம் மாவட்டத்தின் தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்குட்டுவன் கேட்டுக்கொண்டுள்ளார்.