Categories
பல்சுவை

முட்டாள்கள் தினத்தில்…. சிறுமிக்கு 40 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார்…. எப்படி கிடைத்தது தெரியுமா….?

பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஏப்ரல் 1-ம் தேதி செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுத்தது. அதாவது ஏப்ரல் 1-ம் தேதி அன்று உங்களுடைய பழைய காரை கொடுத்துவிட்டு புதிதாக பி.எம்.டபிள்யூ காரை பெற்றுக்கொள்ளலாம் என விளம்பரத்தில் இருந்தது. ஆனால் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் விளம்பரம் ஏப்ரல் 1-ம் தேதி பப்ளிஷ் ஆனதால் அனைவரும் தங்களை முட்டாள் ஆக்குவதற்காக இப்படி விளம்பரம் செய்திருக்கிறார்கள் என நினைத்து இருக்கின்றனர்.

ஆனால் 15 வயதுடைய டியானா மார்ஸ் என்ற சிறுமி தன்னுடைய அப்பாவின் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய காரை பி.எம்.டபிள்யூ நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு சிறுமியிடம் இருந்த பழைய காரை வாங்கிவிட்டு அதற்கு பதிலாக 40 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பி.எம்.டபிள்யூ கார் சிறுமிக்கு வழங்கப்பட்டது. மேலும் புதிய பி.எம்.டபிள்யூ காரின் நம்பர் பலகையில் No Fools என்ற வார்த்தை எழுதப்பட்டது

Categories

Tech |