Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘முட்டாள் கொரோனாவை எட்டி உதைத்து விட்டேன்’… நடிகை பூஜா ஹெக்டேவின் வைரல் டுவீட்…!!!

நடிகை பூஜா ஹெக்டே கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பூஜா ஹெக்டேவுக்கு தளபதி 65 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் ‘எல்லோருக்கும் நன்றி. நான் நன்றாக குணமடைந்து விட்டேன். முட்டாள் கொரோனாவை எட்டி உதைத்து விட்டேன் . நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. நான் குணமாக வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |