Categories
தேசிய செய்திகள்

முட்டைகளை எடுக்கும் இளம்பெண்…. ஆக்ரோஷத்துடன் தாக்கும் ஆண்மயில்…. வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!!!!!!

இளம்பெண் ஒருவர் மயில் அடைகாத்து வைத்திருக்கும் முட்டைகளை அபகரிக்க முயன்றபோது, ஆண் மயில் பாய்ந்து வந்து தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நமது நாட்டின் தேசிய பறவையாக மயில் இருக்கின்றது. இந்தியாவில் வயல்வெளி போன்ற அனைத்து பகுதிகளிலும் மயில்கள்  வசித்து வருகின்றது. அதிலும் பொதுவாக மயில்கள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெண் மயில் அடைகாக்கும்  போது ஆண்மையில் இறை தேட சென்றுவிடும். ஆண் மயில்  வந்த உடன் பெண்மயில் இரைதேடச் செல்லும். பெண் மயில்  வரும்வரை ஆண்மயில் முட்டைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

மனிதர்களுக்கு தொந்தரவு எதுவும் கொடுக்காமல் இருக்கக்கூடிய மயில்கள் தங்களுக்கு ஆபத்து என வரும்போது மிகவும் ஆக்ரோஷம் அடைந்து விடுகின்றது. இந்த நிலையில் மயிலின் முட்டைகளை திருட சென்ற இளம்பெண் ஒருவரை ஆண்மயில் பாய்ந்து விரட்டும் காட்சிகள்  இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பெண்மயில்  இரை தேடச் சென்ற சமயத்தில் தொகையுடன் கூடிய ஆண்மயில் முட்டைகளின் மீது அமர்ந்து இருக்கின்றது.

https://twitter.com/i/status/1528939349709967360

 

அப்போது அந்த இளம் பெண் மயிலை பிடித்து தூக்கி வீசுகிறார். ஆனால் மயில் பறக்காமல் இறக்கையை படபடத்து விட்டு அங்கேயே நிற்கின்றது. அந்த பெண் கீழே இருந்து முட்டைகளை ஒன்றாக ஒதுக்கி போட்டு சேகரித்துக் கொண்டு இருக்கின்றார். இதனை பார்த்த அந்த ஆண்மயில் பறந்து வந்து முட்டையை எடுக்கும்  பெண்ணின் மீது பாய்ந்து கீழே தள்ளுகிறது. இந்த காட்சிகளை இதுவரை  இலட்சக்கணக்கான பார்வையிட்டு வருகின்றனர். மேலும் இதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.

Categories

Tech |