உலக அளவில் முட்டை உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
உலக அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 2020-21 காலகட்டத்தில் 12,211 கோடியாக அதிகரித்துள்ளது. 1950 முதல் 51 காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தி 183 கோடியாக இருந்த நிலையில் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.
1950களில் ஒரு ஆண்டுக்கு ஒரு தனி நபருக்கு கிடைக்கும் முட்டைகளின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில் 2020-21 ஆண்டுக்கு 91 முட்டைகளாக அதிகரித்துள்ளது. உலக அளவில் முட்டை உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது.