Categories
தேசிய செய்திகள்

முட்டை கிரேவியில் அட்டைப்பூச்சி….. மருத்துவமனை கேன்டீன் மூடல்….. பெரும் அதிர்ச்சி….!!!!

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த நெடுங்காடு மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டுவந்த குடும்பஸ்ரீ கேன்டின் மூடப்பட்டுள்ளது. நேற்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் வாங்கிய முட்டை கிரேவியில் அட்டை பூச்சி இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது சமையலறையில் சுத்தமற்ற சூழலில் சமையல் செய்யப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டு, உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அழுகிய பழங்களும் சாறு தயாரிப்பதற்காக இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண்கள் சுயஉதவிக்குழுவான குடும்பஸ்ரீயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஆவணங்களை சரி பார்த்ததில் உரிமம் இல்லாமல் இத்தனை நாட்கள் இயங்கி வந்தது தெரியவந்தது. கழிவு மேலாண்மை உள்ளிட்ட குறைபாடுகளை சரிசெய்ய நோட்டீஸ் கொடுத்து கேண்டி மூடுவதற்கு நகராட்சி சுகாதார துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கேண்டினை நம்பி தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றன.

Categories

Tech |