முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 6 தக்காளி – 1
வெங்காயம் – 10 மல்லி (தனியா) -1 தேக்கரண்டி
வத்தல் – 5
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
தேங்காய், உப்பு, – தேவையான அளவு மஞ்சள்தூள் – தேவையான அளவு மிளகு -அரைத்தேக்கரண்டி
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து அதில் முட்டையை அவித்து, தோல் உரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அரை மூடி தேங்காய் துறுவி பால் எடுத்து கொள்ளவும்.
மிக்சி ஜாரில் பெருஞ்சீரகம், சீரகம், மல்லி (தனியா), வத்தல், மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும். மேலும் வெங்காயம், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதங்கியபின் தேங்காய்பாலை சேர்க்கவும். அதனுடன் அரைத்து வைத்த மசாலா, உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்து சற்று கெட்டியானபின் வேக வைத்திருக்கும் முட்டையை சேர்த்து சிறிது கொதித்ததும், மல்லி இலைகளை தூவி இறக்கவும். இப்பொழுது சுவையான முட்டை குழம்பு தயார்.