Categories
அரசியல் மாநில செய்திகள்

முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா?…. ப.சிதம்பரம் கேள்வி….. வைரல் பதிவு…..!!!!

தமிழகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு அவரிடம் மன்னிப்பு கோரிய பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து சரவணன் விலகியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பி உள்ள கேள்வி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்தார்.டாக்டர் சரவணன் கட்சியிலிருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார். முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா? வாழ்க சுதந்திரம் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |