Categories
மாநில செய்திகள்

முட்டை விலை கடும் உயர்வு…. மேலும் அதிகரிக்க வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து 7 நாட்களில் 90 காசுகள் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 15 காசுகளில் இருந்து ஒரே நாளில் 35 காசுகள் விலை உயர்த்தி உள்ளது. அதன்படி ஒரு முட்டை விலை 4 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகள் என இருந்த நிலையில் தற்போது மேலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் மீண்டும் 35 காசுகள் பண்ணை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 90 காசுகள் விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் விலை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |