Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. மருத்துவமனையில் அனுமதித்த மக்கள்…!!

முட்புதரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளுர் மாவட்டத்திலன்  அருகே பள்ளிப்பட்டு தாலுகா மேல்பொதட்டூர்பேட்டையில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது .அந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள முட்புதரில் ஒன்றில் குழந்தை அலறல் சத்தம் கேட்டதும் அவ்வழியே சென்ற பக்தர்கள் பார்த்தனர் . அங்கு பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை ஒன்று  துணியால் கட்டப்பட்டு கிடந்தது.பொதுமக்கள் அக்குழந்தையை மீட்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்

பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் தொப்புள்கொடி அறுக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று குழந்தையை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் ஈவு இரக்கமில்லாமல் முட்புதரில் வீசிய பெண் யார்? எதற்காக முட்புதரில் குழந்தையை வீசி சென்றார் ? பெண் குழந்தையாக பிறந்ததாலா ? என்று பல கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |