சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முட்புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விவேக், ராஜசேகர், மற்றும் ஹூசைன் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவேக், ராஜசேகர் மற்றும் ஹூசைன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.