Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“முதன்முதலாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்”…. அன்னையர் தினத்தில் உருக்கமான பதிவு…!!!!

நடிகை காஜல் அகர்வால் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மகனின் புகைப்படத்தை முதல்முதலாக வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் கருவுற்றிருந்த நிலையில் சென்ற ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தன்று முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CdSDaCNhaOM/?utm_source=ig_web_button_share_sheet

மேலும் அவர் அதில் கூறியுள்ளதாவது, நீ எனக்கு எவ்வளவு விலை மதிப்பற்றவன் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். உன்னை முதன் முறையாக ன் கைகளில் வாங்கியபோது  உன் சிறு கையை என் கையால் பிடித்தபொழுது உன் சுவாசத்தை உணர்ந்து போது உன் அழகிய கண்களை பார்த்த பொழுது எப்போதும் காதலில் என்பதை உணர்தேன். நீ தான் என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் முதல் அனைத்துமே. இனிவரும் ஆண்டுகளில் என்னால் முடிந்தவற்றை உனக்கு கற்றுக் கொடுப்பேன். ஆனால் நீ ஏற்கனவே எனக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருக்கின்றாய் என உருக்கமாக பலவற்றை கூறி தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார் காஜல் அகர்வால்.

Categories

Tech |