கனடாவில் உள்ள ஒரு பெண்ணுக்கு புதிதாகரத்தம் உறைதல் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவித்துள்ளது.
கனடாவில் கியூபெக் மாகாணத்தில் உள்ள பெண் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த அபாயகரமான நோய் கனடாவில் முதன்முதல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், மேலும் உரிய சிகிச்சை தொடர்ந்து வருவதாகவும் கியூபெக் சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இத்தகைய நோய் கண்டறியப்பட்ட அந்தப் பெண் அஸ்ட்ராஜெனெகா என்ற இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து இத்தகைய அபாயகரமான நோய் கியூபெக் மாகாணத்தில் வேறு யாருக்காவது பரவியுள்ளதா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நோய் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து அந்நாட்டு மருத்துவ குழு தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றது.