தாய்லாந்து நாட்டில் பௌத்த துறவி புத்தருக்கு காணிக்கையாக தன்னுடைய தலையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு தாய்லாந்திலிருக்கும் புகிங்காங் மடத்தினுடைய மடாதிபதியாக 68 வயதான தம்மகோர்ன் வாங்க்பிரீச்சா இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய தலையை வெட்டுவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்திருந்ததாக அவருடைய சீடர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் தம்மகோர்னும் அவருடைய தலையை வெட்டி புத்தர் பீடத்திற்கு அருகில் வைத்து விட்டு உயிரிழந்தார்.
மேலும் இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, புத்தரை திருப்திப்படுத்தவே தன்னுடைய தலையை வெட்டி காணிக்கையாக செலுத்தினேன் என்றும், தன்னுடைய மறு வாழ்வு காலத்தில் முதன்மை துறவியாக பிறப்பதற்கு புத்தர் ஆசியை வழங்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவலறிந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் துறவியினுடைய இறுதி சடங்கிற்கு ஆயத்தமானார்கள். ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.