Categories
மாநில செய்திகள்

முதன் முதலாக….. சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு….. 315 பயோ மெட்ரிக் எந்திரங்கள்….!!!!

சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்காக .315 பயோமெட்ரிக் எந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவானது பதிவேட்டில் கையொப்பம் இடும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களில் வருகைப் பதிவு ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது பணிக்கு வரும் போது, பணி முடிந்து திரும்பும் போது என்று பெறப்பட்டு வருகின்றது.

பணியாளர்களின் வருகை பதிவினை சரியான நேரத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக சென்னை மாநகராட்சியில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தலைமை அலுவலகத்தில் 10,  வட்டார அலுவலகங்களில் 3, ஒரு மண்டலத்திற்கு தலா இரண்டு என 15 மண்டல அலுவலகங்களில் 30, பகுதி அலுவலகங்களில் 47, வார்டு அலுவலகங்களில் 200, வாகன நிறுத்தத்தில் 20 இதர இடங்களுக்கு 5 என மொத்தம் 315 பயோமெட்ரிக் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் பயோமெட்ரிக் இயந்திரம் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு விரைவில் பணியாளர்கள் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |