நடிகர் சிரஞ்சீவியின் திருமண புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடிகர் சிரஞ்சீவி தற்போதும் விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் ஆண்டுக்கு ஒரு படம் வெளியாகிறது. இவர் நடிப்பில் கடைசியாக ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படம் வெளியாகி இருந்தது. இவருடைய கைவசத்தில் தற்போது ஆச்சாரியா, காட்பாதர் போல சங்கர் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் நடிகர் சிரஞ்சீவி, சுரேகா என்பவரை 1980-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு ராம்சரண், சுஷ்மிதா, ஸ்ரீஜா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ராம்சரண் தெலுங்கு திரையுலகில் அவரது தந்தையைப் போலவே முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி சுரேகாவின் திருமண புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.