மூச்சு மாதிரியை வைத்து கொரோனாவை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
மூச்சு மாதிரியை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி, முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்நிலையில் இந்த கருவி, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. மேலும் ஆஸ்பத்திரிகள், நடமாடும் பரிசோதனை மையங்கள், டாக்டர்கள் அறை போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம். 3 நிமிடங்களில் இது முடிவை தெரிவிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர் மேற்பார்வையில் இந்த சோதனையை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையில், கொரோனா பாசிட்டிவ் முடிவு, 91.2 சதவீதம் துல்லியமாக இருப்பதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 160 மாதிரிகளில் சோதனை நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.