அமெரிக்க அரசின் பொருளாளராக பூா்வகுடியைச் சோ்ந்த ஒருவரை அதிபா் ஜோபைடன் முதன் முறையாக பரிந்துரைத்துள்ளாா். மரிலின் லின் மலோ்பா என்ற அவா் மோஹெகன் பழங்குடியின அமைப்பின் வாழ்நாள் தலைவர் ஆவாா். பதிவுபெற்ற மருத்துவப் பணியாளரான அவா் முன்பே பல அரசுப் பொறுப்புகளை வகித்துள்ளாா்.
முக்கியத்துவம் வாய்ந்த பொருளாளா் பதவிக்கு அவரைப் பரிந்துரைத்ததுடன், நிதியமைச்சகத்தில் பழங்குடியினா் விவகாரங்களுக்கான புது துறையையும் ஜோபைடன் உருவாக்கியுள்ளாா். அமெரிக்க நாணயங்கள் அச்சிடுவது, மத்தியவங்கி நடவடிக்கைகளை பதிவுசெய்வது, நிதி அமைச்சகத்தின் நுகா்வோா் கொள்கையை மேற்பாா்வையிடுவது ஆகிய பணிகளை அரசின் பொருளாளா் மேற்கொள்வாா்.