Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதற்கட்டமாக 18 தெருக்கள் மூடல்…. அதிரடி நடவடிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முதற்கட்டமாக 18 தெருக்கள் மூடப்பட்டுள்ளது. பல்லவி நகர், திருப்பாலை, கே.கே நகர், விளாங்குடி, வில்லாபுரம் உள்ளிட்ட 18 தெருக்கள் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |