Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரால் தான் இது சாத்தியமானது” – நெகிழும் மாணவன்

முதலமைச்சரால் தான் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றதாக சேலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தினேஷ் நிகழ்ச்சியோடு நன்றி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் மல்லூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரசு பள்ளி மாணவர் தினேஷ் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கூலி தொழிலாளியின் மகனான இவர் 2008-ஆம் ஆண்டு பள்ளி முடிந்ததும் மருத்துவராக வேண்டும் என்று விடா முயற்சியுடன் படித்து வந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் 435 மதிப்பெண்கள் பெற்று நிலையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இவருக்கு இடம் கிடைத்தது.

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இல்லை என்றால் தனது வாழ்க்கையை மாறி இருக்கும் என்றும் கனவை நனவாக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மாணவர் தினேஷ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

Categories

Tech |