தமிழகத்தில் ஏழை மக்களின் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை கட்டணமில்லா வழங்குவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இணைவதற்கு ஆண்டு வருமானம் 1.20 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டம் தொடர்பாக புகார் தெரிவிப்பதற்கும் மற்றும் குறைகளை தெரிவிக்கவும் 1800 425 3993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களுக்கு http://www.cmchistn.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.