Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் அலுவலகத்தில் வேலை….. விண்ணப்பிப்பது எப்படி?…. மிஸ் பன்னா…. அப்புறம் வருத்தப்படுவீங்க….!!!!

தமிழக அரசுக்கு உதவுவதற்கு இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டுகாலம் ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சரின் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

முதலமைச்சரின் இந்தத் திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு 5.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்கு http://www.bim.edu/Tncmpfhttps என்ற இணையதளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி காலம் ; 2 ஆண்டுகள்
சம்பள விவரம் ; ரூ.65,000 + ரூ.10,000 (Additional Allowance)
தகுதி ; டிகிரி (தமிழ் தெரிந்திருக்க வேண்டும்)
தேர்வு செய்யப்படும் முறை; எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு
பணியிடம்; சென்னை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25/05/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 10/06/2022

Categories

Tech |