Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம்… தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!!

எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கால் பதித்த நாள் முதல் தற்போது வரை உள்ள அரசியல் பயணத்தை தெரிந்துகொள்வோம்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் 1954ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பிறந்தார். தமது 17வது வயதில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார்.

18 வயதில், சிலுவம்பாளையம் அதிமுக கிளை செயலாளர் பதவி வகித்தார்.

1985ம் ஆண்டு சேலத்தில் ஜெயலலிதா பேரவையை தொடங்கினார்.

1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக ஜெ., அணி சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1990ம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டத்தின் இணை செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மீண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார்.

1998ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

1998ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, அரசியலில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து தொடர்ந்து அதிமுகவில் தனது பயணத்தை மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்றார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

2017 பிப்ரவரியில் சசிகலா சிறைக்கு செல்ல இருந்ததால் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு உள்ளார்.

Categories

Tech |