Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிரூபர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார். அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் அன்று நந்தவனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்கான உரிய அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். இது ஒரு கண்டனத்திற்குரிய விஷயம். மேலும் தமிழகத்தில் நடைபெறும்  தற்கொலை, தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போதுமான விளக்கத்தை அளித்து விட்டார். இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அனைத்து விவரத்திற்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர்  மட்டுமே பொறுப்பு. ஏனென்றால் ஓபிஎஸ்-க்கு அப்போது முதலமைச்சரின் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் குற்றம் செய்தவர்கள் என்று தான் விசாரணை அறிக்கையின் முடிவு இருக்கிறது.

மேலும் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இறப்பிற்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. அந்த இழப்பீடு போதுமானது இல்லை. ஏனென்றால் அவர் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரோ அதை அரசு வழங்க வேண்டும். இல்லை என்றால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் ஆந்திராவில்  தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்நிலையில்  தமிழர்களை தாக்கியதற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |