Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதியாக… இலங்கை தமிழர்களுக்கு உதவ ரூ 50,000 கொடுத்த யாசகர்… பாராட்டிய அதிகாரிகள்…!!!

யாசகர் பூல்பாண்டி இலங்கை தமிழர்களுக்கு உதவ ரூ 50,000 நிதி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியில் வசித்து வருபவர் பூல்பாண்டி(50). இவர் யாசகம் எடுத்து தனது பகுதியில் இருக்கின்ற பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்களை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் மதுரைக்கு வந்தபோது அங்கு கொரோனா காரணமாக ஊரடங்கு ஏற்பட்டது. இதனால் அவரால் தூத்துக்குடி செல்ல முடியவில்லை. அதனால் மதுரையிலே தங்கியுள்ளார்.

அதன்பின் அவர் மதுரையில் யாசகம் எடுத்து நிவாரண நிதியாக கலெக்டரிடம் நிதி கொடுத்தார். அப்போது 35 முறை தலா பத்தாயிரம் வீதம் என மொத்தம் ரூ 3,50,000 கலெக்டரிடம் நிதி கொடுத்து உள்ளார். இதனை அடுத்து 16 முறை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா பத்தாயிரம் என 1,60,000 நிதி கொடுத்துள்ளார். மொத்தம் 51 முறை ரூ 5,10,000 நிதி கொடுத்துள்ளார். இந்நிலையில் பூல்பாண்டி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று 52-வது முறையாக தற்சமயம் ரூ 50,000 நிதி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பூல்பாண்டி கூறியதாவது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று ஏழைகளுக்கு உதவுவதற்காக நிதி கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். எனவே இப்போது பொதுமக்களிடமிருந்து யாசகம் பெற்று ரூ 50 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். இந்த நிதி இலங்கை தமிழர்களுக்கு சென்றடைய வேண்டும் என்று கூறினார். அவரை அதிகாரிகள் உட்பட பலர் பாராட்டி உள்ளார்கள்.

Categories

Tech |