Categories
மாநில செய்திகள்

முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. நவம்பர் 11 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணாபல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நவம்பர் 11ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டிற்கான வகுப்பு தொடங்குகிறது.

புதிய மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடத்திக் கொள்ளலாம் எனவும் அதன் பிறகு பல்கலை அறிவித்துள்ள தேதியில் பாடத்திட்டத்தை நடத்த தொடங்கலாம் எனவும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் புதிய மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வுக்கு மார்ச் 7ஆம் தேதி வரை வகுப்புகள் நடக்கும் என்றும் மார்ச் 13ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |