அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கமலின் விக்ரம் படம் முதலிடத்தை பிடித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.
படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டு வருகின்றார். இந்த நிலையில் ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதையறிந்த கமலின் ரசிகர்களோ ஆண்டவர்னா சும்மாவா..! என கொண்டாடி வருகின்றனர்.