Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் அப்பா இல்ல…. “அவரை வைத்து தான் இயக்க ஆசைப்படுகின்றேன்”…. விஜய் மகன் சஞ்சய்….!!!!!

முதலில் விஜய் சேதுபதியை வைத்துத்தான் திரைப்படம் இயக்க ஆசைப்படுவதாக விஜயின் மகன் சஞ்சய் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் விஜய் வைத்து படம் இயக்குவது குறித்து அவரின் மகன் சஞ்சய் கூறியது பற்றி பேட்டி ஒன்றில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி கூறியது வைரலாகி வருகின்றது. அவர் கூறியதாவது, விஜயின் மகன் சஞ்சய் தற்பொழுது லண்டனில் மேற்படிப்பு படித்து வருகின்றார். படிப்பு முடிந்த பிறகு இயக்குனராக களம் இறங்க இருக்கின்றார். சஞ்சய்யிடம் எஸ்.ஏ.சி, உனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. நீ ஈசியாக இயக்குனராகி விடலாம். அதாவது விஜய் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக இருப்பதால் உன்னுடைய அப்பாவை வைத்து நீ படத்தை இயக்கி பெரிய இயக்குனராகிவிடலாம் எனக்கு கூறியதற்கு தான் முதலில் விஜய் சேதுபதியை வைத்துத்தான் படம் இயக்குவேன்.

அதற்கு காரணம் தன்னுடைய அப்பாவை வைத்து இயக்கினால் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அதனால் விஜயை வைத்து இயக்கியதால் தான் இந்த வெற்றி கிடைத்தது என பெயர் வந்துவிடும். ஆகையால் முதலில் வேறொரு நடிகரை வைத்து திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்ட பின் தான் தன்னுடைய தந்தையான விஜய்யை வைத்து இயக்கும் எண்ணம் சஞ்சய்க்கு இருப்பதாக எஸ்.ஏ.சி கூறியுள்ளார். சஞ்சய் தன்னுடைய திறமை மீது இந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருப்பதாக கூறி இருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |