Categories
உலக செய்திகள்

முதலில் எங்களுக்கு தான்…. இல்லையேல் தடை விதிக்கப்படும்…. எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய தலைவர்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு தான் முதலில் தடுப்பூசி விநியோகம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அஸ்ட்ராஜேனேகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் உலக நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் செய்து வருகிறது. தற்போது தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் UrsulavorDerLeyen ஏற்றுமதி மீண்டும் துவங்குவதற்கு முன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தான் முதலில் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிடில் ஐரோப்பா ஒன்றிய நாடுகளில் இருந்து  தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி தடை செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதனிடையே  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்வது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிகை விடுத்துள்ளார்.

Categories

Tech |