கொரோனா தாக்கம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் சென்று வழிபட அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்றும் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் நேற்று வரலட்சுமி நோன்பு, சிவ பக்தர்களுக்கு முக்கியமான பிரதேஷம் மற்றும் ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளாகும். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு நடத்தினர். மேலும் முகூர்த்தநாள் என்பதால் ஏற்கனவே கோவிலில் பதிவு செய்திருந்த திருமணங்கள் மட்டும் கோவிலுக்குள் நடந்தது. கோவிலில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் அனைத்தும் கோவிலுக்கு வெளியே வாசலிலே நடைபெற்றன.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் முருகன் கோயிலில் திருமணத்தில் யார் முதலில் தாலி காட்டிக்கொள்வது என்பதில் இருவீட்டாரிடையே மாறி மாறி தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோயிலில் நடந்த திருமணத்தின் போது கூட்டநெரிசலில் யார் முதலில் கோயிலுக்குள் சென்று தாலி கட்டிக்கொள்வது என்ற பிரச்சனையால் இரு மணமக்கள் வீட்டாரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோவில் வளாகத்துக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/dhuruvammedia/status/1428647970208055301