தமிழ் திரைப்பட உலகில் சமந்தா தனக்கென்று ஒரு ரசிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். அவர் சமீபகாலத்தில் . தான் காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். இந்தச் செய்தி இணையதளங்களில் காட்டுத்தீயை போல் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் அவரது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் அக்கினேனி என்ற தனது கணவர் குடும்பப் பெயரை வைத்திருந்தார். ஆனால் தற்போது நாக சைதன்யாவை பிரிவதற்கு முடிவு எடுத்த பிறகு தனது கணவரின் குடும்பப் பெயரை நீக்கி சமந்தா என்று மட்டும் வைத்துள்ளார் . இதனிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் சந்தோஷமான விஷயங்களை மட்டுமே பதிவிடும் சமந்தா தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் “உலகை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நான் திருந்த வேண்டும், அதை என் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்” என பதிவு செய்துள்ளார்.