பீகார் மாநிலத்தில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்ஜோத்திடம் சில மாணவிகள் எங்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும். இதனால் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
அரசு பல இலவச திட்டங்களை அறிவிக்கும் போது 20, 30 ரூபாய் மதிப்புள்ள நாப்கின்களை எங்களுக்கு இலவசமாக வழங்க முடியாதா என்று கூறியுள்ளனர். அதற்கு ஹர்ஜோத் கூறியதாவது, இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு இருக்கிறதா? நாளைக்கு நீங்கள் அரசு ஜீன்ஸ் துணிகளை இலவசமாக வழங்கக் கூடாதா என்று கேட்பீர்கள். அதன் பிறகு அழகிய காலணிகளை இலவசமாக வழங்குங்கள் என்பீர்கள். அதன் பின் கடைசியாக குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது காண்டத்தை இலவசமாக கொடுங்கள் என்று கேட்பீர்கள்.
ஏன் அரசிடம் இருந்து இலவசமாக எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மாணவிகள் நீங்கள் தேர்தலின் போது இலவச திட்டங்களை கூறினேன் வாக்குகளை பெறுகிறீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளனர். இதற்கு ஹர்ஜோத் நீங்கள் ஏன் வாக்களிக்கிறீர்கள். பாகிஸ்தானை போன்று வாக்களிக்காமல் இருங்கள் என்று கூறியுள்ளார். இந்த பேச்சுதான் தற்போது சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில், ஹர்ஜோத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்திற்காக கடுமையாக போராடிய நபர்களில் நானும் ஒருவர். சில நபர்கள் அவர்களுடைய தவறான எண்ணத்திற்கு அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மேலும் சிலர் என்னுடைய நன்மதிப்பு மற்றும் பெயரை கெடுப்பதற்காக தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.