ஜிவி பிரகாஷ் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.
இந்நிலையில் மொழி தான் என்னுடைய தாய் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்று 75வது ஆண்டு கொண்டாட்டத்திற்கான சிறப்பு பாடலை இசை அமைக்க உள்ள ஜி.வி பிரகாஷ் மொழியா? தேசமா? என்றால் முதலில் எனது மொழியைத் தான் வைப்பேன். அதன் பின்புதான் என் தேசத்தை வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.