முதலில் யார் காதலை சொன்னது என பேட்டியில் ரவீந்தர் கூறியுள்ளார்.
மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் தனியார் யூடூப் சேனலுக்கு பேட்டி அளித்த ரவீந்தரிடம் பேட்டியில், முதலில் யார் காதலை சொன்னது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரவீந்தர் ப்ரொபோஸ் செய்தது நான்தான். ப்ரொபோஸ் செய்தாலும் ரொமான்டிக்கான முறையில் எல்லாம் காதலை சொல்லவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய உருவத்தை பார்த்து தான் இந்த திருமணத்தை பற்றி பலரும் விமர்சிக்கின்றார்கள். என்னைத் தவிர அனைவருக்கும் வெயிட் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.