மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி அதிகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் பெரும்பாலும் தங்களது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதிலிருந்து அனைத்து முக்கிய வங்கிகளும் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றது.
எஸ்பிஐ போன்ற முக்கிய வங்கிகள் 5.65 சதவீதம் வரை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சஸ் வங்கி போன்றவை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. ஆனால் அதைக் காட்டிலும் தபால் நிலையத்தில் செயல்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் பொது வருங்கால வாய்ப்பு நிதி கணக்கு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி அதிகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதில் முதலாவதாக மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 7.4 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வட்டி நிலையான வைய்ப்பு விகிதங்களை விட அதிகமாகும். 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் இந்த கணக்கை தனியாகவோ அல்லது தங்களது மனைவியுடன் சேர்ந்தோ தொடங்க முடியும் . இதில் குறைந்தபட்சம் வைய்ப்பு தொகை 1000 ரூபாய், அதிகபட்சமாக 15 லட்சம் வரை செலுத்த முடியும்.
அடுத்தது பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு இந்தத் திட்டத்திலும் ஆண்டுதோறும் 7.1% வட்டி வழங்கப்படுகின்றது. இது மற்ற வங்கிகளில் வழங்கப்படும் வட்டியை காட்டிலும் அதிகம். எனவே இதில் மக்கள் தைரியமாக முதலீடு செய்யலாம். அதுமட்டுமில்லாமல் பெண் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு சேமிக்கப்பட்டு வரும் சுகன்யா சம்ரித்ரி கணக்கிலும் 7.6 சதவீத வருடாந்திர கூட்டு வட்டி வழங்கப்படுகின்றது.