Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“முதலீட்டை டபுள் மடங்காகும் கிசான் விகாஸ் பத்திர திட்டம்”…. எப்படி இணைவது….? முழு விவரம் இதோ…!!!

கிசான் விகாஸ் பத்திர கணக்கை தபால் நிலையத்தில் திறக்கும் முறையை பற்றி இதில் நாம் பார்ப்போம். 

தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதி சேவைகளை செய்து வருகிறது. முதலீட்டுக்கான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. மிகப்பிரபலமான இந்த முதலீடு  திட்டத்தில் தொகை 124 மாதங்களில் இரு மடங்காக உயர்ந்து விடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு இதில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் நன்கு வரவேற்பு பெற்றுள்ளது.

2020-21 ஆம் ஆண்டுகளில் 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானம் கிடைப்பது உறுதி என்பதால் பாதுகாப்பான முதலீடாகும். யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். இந்திய குடிமக்கள், 18 வயதுக்கு மேற்பட்டோர், 18 வயதுக்கு கீழானவர்கள் பெயரில் பெற்றோர்கள் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகளும் முதலீடு செய்யலாம். மெச்சூரிட்டி சமயத்தில் தொகை மற்றும் வட்டி உள்ளிட்ட ஒட்டுமொத்த தொகையும் வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

ஆதார் அட்டை / பான் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / பாஸ்போர்ட் (இவற்றில் ஏதாவது ஒன்று)

முகவரி சான்று (Address Proof)

பிறப்பு சான்றிதழ்

தகுதி:

முதலீட்டாளர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலர் மைனரின் சார்பாக முதலீடு செய்யலாம்.

Kisan Vikas Patra திட்டத்தில் NRI மற்றும் HUF போன்றவர்கள் முதலீடு செய்ய முடியாது.

KVP பத்திரங்களை தனி நபராகவோ அல்லது இரண்டு நபராகவோ சேர்ந்து வாங்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியிலோ சென்று கணக்கை திறக்கலாம்.

இதற்கான Form-A விண்ணபத்தை ஆன்லைன் மூலமாக https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/form/NC69A1-PurchaseofKVPthroagents.pdf என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து நிரப்பலாம்.

விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

அதாவது அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்றவைகளை இணைக்க வேண்டும்.

உங்களின் அசல் சான்றிதழ்களையும் எடுத்து செல்ல வேண்டும். தபால் அலுவலக ஊழியர்கள் உங்களின் ஆவணங்களை சரி பார்த்து KYC Verification-ஐ முடிப்பார்கள்.

நீங்கள் பணம் செலுத்தியவுடன் அதற்கான KVP பத்திரங்களை வழங்குவார்கள். நீங்கள் பத்திரங்களை பெற்றதும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்திய தபால் நிலையங்கள் தற்போது பத்திரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் வழங்குகிறது. எனவே சேமிப்பு பத்திரங்களை மின்னசல் மூலமாக வழங்க தபால் ஊழியரை கேட்டு கொள்ளலாம்.

Categories

Tech |