நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிக்க முயற்சித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தற்போதைய காலத்தில் பலரும் தங்களது திறமைகளை வெளி உலகத்திற்கு காட்ட பல்வேறு சாகசங்கள் செய்வதாக சிக்கல்களில் சிக்கி கொள்கின்றனர். அவை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. அவ்வகையில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே இரண்டு முதலைகள் நெருங்கி வருகின்றன. ஆனால் அவர் சிறிதும் பயம் கொள்ளாமல் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது அவர் அருகே வந்த முதலை திடீரென குளித்துக் கொண்டிருந்தவரின் தோள்பட்டையை கடிக்க முயற்சித்தது. இதனால் பயந்துபோன அவர் முதலையை தண்ணீருக்குள் அழுத்தி விட்டு உடனடியாக தண்ணீரிலிருந்து மேலே ஏறி தப்பினார். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது போன்ற விபரீத சாகசங்கள் செய்ய வேண்டாம் என பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1316370260422000640