மெக்சிகோ நாட்டில் தென்மேற்கு பகுதியில் சான் பெட்ரோ ஹவுமெலுலா என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா ஆவார். இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டும் என்று பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது. இந்த திருமணம் கிறிஸ்துவ முறைபடி நடைபெற்றது. இந்நிலையில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பிற்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் முடிந்த பிறகு விக்டர் பெண் முதலையின் உதட்டில் முத்தமிட்டார். இந்த திருமணம் குறித்து மேயர் விக்டர் கூறியதாவது “இயற்கையிடம் மழை, உணவு, மீன் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை என்றார். பின்னர் இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தைச் சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது என்பதும் இயற்கையின் கருணையை வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடிகளால் பின்பற்றப்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Categories